பள்ளி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 4 ஆசிரியர்கள் கைது - Seithisudar

Wednesday, April 30, 2025

பள்ளி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 4 ஆசிரியர்கள் கைது

 



மதுரை கே.கே. நகரில் அமைந்திருக்கும் தனியார் மழலையர் பள்ளி ஒன்றில் நேற்று விளையாடிக் கொண்டிருந்த ஆருத்ரா என்ற 4 வயது சிறுமி எதிர்பாராத விதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டி ஒன்றில் தவறி விழுந்துள்ளார்.


சிறுமி தொட்டியில் விழுந்ததை அறிந்ததும் உடனடியாக அவரை மீட்டு அங்குள்ள பொறுப்பாளர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.


ஆனால், சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இதற்கிடையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, சிறுமி சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக அந்த தண்ணீர் தொட்டியில் தத்தளித்து போராடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இறுதியில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆருத்ரா உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.


4 ஆசிரியர்கள் கைது

 இந்த துயர சம்பவத்தை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.


மழலையர் பள்ளியின் உரிமையாளரை கைது செய்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து பள்ளி ஆசிரியர்கள் 4 பேரையும் பொலிஸார்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot