நடிகர் அஜித் குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அஜித்குமாருக்கு கடந்த ஏப்ரல் 28ம் தேதி பத்மபூஷன் விருது, டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் வழங்கப்பட்டது.
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்கினை போற்றும் வகையில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனது மனைவி ஷாலினி, மகள், மகன் மற்றும் சில குடும்ப உறுப்பினர்களுடன் அஜித் கலந்துகொண்டார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அஜித்குமார் நேற்று கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து திரும்பிய அஜித் விமானநிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி கால் மற்றும் தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிகிச்சை முடிந்து நேற்று இரவு அவர் வீடு திரும்பினார்.
No comments:
Post a Comment