தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், கோவை மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் சரவணக்குமார் தலைமையிலும், மாநிலத் துணைத் தலைவர் அருளானந்தம் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள், ஆசிரியர்களின் பிரச்னைகளை உடனுக்குடன், சங்க மாவட்டத் தலைமையிடம் தெரிவிக்க, பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வரும் 10ம் தேதி, திருச்சியில் நடைபெறும் மாநிலத் தேர்தலில் அனைத்து ஆசிரியர்களும் பங்கேற்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வுகளை உடனடியாக நடத்த, மாநில அரசிடம் வலியுறுத்துவது, 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்துதலுக்கு ரூ.10 வழங்க கோருவது, ஒரு முதன்மைத் தேர்வாளருக்குச் 6 உதவித் தேர்வாளர்கள், மற்றும் ஒரே நாளில் 12 விடைத்தாள்கள் மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும், 10ம் வகுப்பில் அகமதிப்பீட்டிற்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment