சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக பட்டதாரி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
தேவகோட்டை ராம்நகர் அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் ஆரோக்கியதாஸ். 47., இவர் நான்கு வருடங்களுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியவர் தற்போது வீட்டில் இருக்கிறார்.
இவரது மனைவி தேவகோட்டையில் தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றுகிறார். இவரது வீட்டில் தங்கி உறவுக்கார 16 வயது சிறுமி படித்துள்ளார்.
மனைவி இல்லாத நேரத்தில் சிறுமியை ஆரோக்கியதாஸ் பாலியல் வன்கொடுமை தொந்தரவு செய்துள்ளார். கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சிறுமி சென்ற போது சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் தெரிந்தது.
இதை கவனித்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தன்னிடம் ஆரோக்கியதாஸ் நடந்து கொண்டதை பற்றி கூறியுள்ளார். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது சிறுமி 2 மாத கர்ப்பம் என தெரியவந்தது.
பெண்கள் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் விசாரித்து ஆசிரியர் ஆரோக்கியதாஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment