தமிழகத்தில் நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 8,980 ரூபாய்க்கும், சவரன் 71,840 ரூபாய்க்கும் விற்பனையானது.
வெள்ளி கிராம் 111 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அன்று தங்கம் வாங்க உகந்த நாளாக கருதப்படும் அட்சய திரிதியை என்பதால், பலரும் நகைகள் வாங்கினர்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 29) தங்கம் விலை கிராமுக்கு, 40 ரூபாய் உயர்ந்து, 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 320 ரூபாய் அதிகரித்து, 71,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஏப்ரல் 30) தங்கத்தின் விலை கிராம் ரூ.8,980க்கும், சவரன் ரூ.71,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே 01) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,640 சரிந்து, நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது.
சவரனுக்கு 1,640 ரூபாய் சரிவடைந்து, 70,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.
No comments:
Post a Comment