‘SWAYAM Plus’ கல்வி திட்டத்தில் AI தொடர்பாக 5 இலவச படிப்புகள்: ஆன்லைனில் Chennai IIT அறிமுகம் - Seithisudar

Friday, June 20, 2025

‘SWAYAM Plus’ கல்வி திட்டத்தில் AI தொடர்பாக 5 இலவச படிப்புகள்: ஆன்லைனில் Chennai IIT அறிமுகம்

 




 'ஸ்வயம் பிளஸ்' கல்வி திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பான 5 ஆன்லைன் படிப்புகளை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஸ்வயம் பிளஸ் ஆன்லைன் கல்வி திட்டத்தின்கீழ் இயற்பியலில் ஏஐ, வேதியிலில் ஏஐ, கணக்குப்பதிவில் ஏஐ, கிரிக்கெட் அனலிட்டிக்ஸ் வித் ஏஐ, ஏஐ மற்றும் எம்எல் யூசிங் பைத்தான் என செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொடர்பாக 5 ஆன்லைன் படிப்புகளை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.


25 முதல் 45 மணி நேரம் வரை கொண்ட இந்த ஆன்லைன் படிப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் கலை, அறிவியல் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பணியில் இருப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சேரலாம். ஏஐ தொடர்பான அடிப்படை விவரங்கள் தெரிந்திருக்க அவசியம் இல்லை. புதிய விஷயங்களை கற்கும் ஆர்வம் இருந்தால் போதும். ஏஐ அறிவு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த கல்வி திட்டத்தின் நோக்கம்.


இந்த ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 12-ம் தேதிக்குள் https://swayam-plus.swayam2.ac.in/ai-for-all-courses என்ற இணையதள இணைப்பில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


13 comments:

Post Top Ad

Your Ad Spot