கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு - Seithisudar

Sunday, June 1, 2025

கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறப்பு

 



கோடை விடுமுறைக்குப் பிறகு மாணவர்களை வரவேற்க பள்ளி வகுப்பறைகள் தயாராகி வருகின்றன.


தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் விறுவிறுப்புடன் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.


வகுப்பறைகள், கழிவறைகள், குழந்தைகள் விளையாடும் இடங்கள் என அனைத்தும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியிருந்தால் அவையும் அகற்றப்பட்டு வருகின்றன.


பள்ளி திறப்பு அன்றே மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இலவச சீருடைகள் வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளதால், அந்தந்த பள்ளிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.


மேலும், புதிய கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள பழைய அட்டையைக் கொண்டு மாணவா்கள் பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.


கல்வியாண்டு நாள்காட்டி: இதற்கிடையே, பள்ளி வேலை நாள்கள், தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, அட்டவணை உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் அடங்கிய கல்வியாண்டு நாள்காட்டி 2018 முதல் ஆண்டுதோரும் பள்ளிக்கல்வித் துறையால் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) நாள்காட்டியை பள்ளிக்கல்வித் துறை விரைவில் வெளியிடவுள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot