நூதன முறையில் ஆசிரியர் போராட்டம் - Seithisudar

Monday, June 16, 2025

நூதன முறையில் ஆசிரியர் போராட்டம்

 



ராமநாதபுரத்தில் தமிழ்நாடு யோகா ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மண்குழியில் புதைந்து தியானம் செய்யும் நுாதன போராட்டம் நடந்தது.


தமிழகத்தில் 2000 பயிற்சி பெற்ற யோகா ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு ஆண்டுகளாக அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்து சம்பளம் பெறாமல் உள்ளனர். அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் தவறான வழிகளுக்கு செல்கின்றனர். அவர்களை திருத்த யோகா பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்து மாணவர்களை நல் வழிப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இதனை வலியுறுத்தி மண்குழி தோண்டி அமர்ந்து தியானம் செய்யும் போராட்டத்தை யோகா பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் காசிநாததுரை நடத்தினார். மண்குழி பிளக்ஸ் பேனரால் மூடி மண்போட்டு மூடி 30 நிமிடம் தியானம் செய்தார். இதில் யோகா ஆசிரியர் சங்கத்தினர் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot