ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு, அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பணியிட மாற்றம் விரும்பும் ஆசிரியர்கள் விதிகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க பள்ளிகல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் வாய்ப்பு வழங்குகிறது.
'எமிஸ்' இணையதளம் மூலம் துவக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் விண்ணப்பிக்க துவங்குவர்.
குறிப்பிட்ட நாளில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்துக்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் உள்ளிட்ட கவுன்சிலிங் நடக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் துவங்கும் முன்பு கவுன்சிலிங் குறித்த அறிவிப்பை வெளியிடும் பள்ளி கல்வித்துறை, நடப்பு 2025 - 2026 ம் கல்வியாண்டு இன்று (ஜூன் 2 ல்) துவங்க உள்ள நிலையில், இதுவரை கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு மற்றும் அட்டவணையை வெளியிடவில்லை.
அரசு பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
கவுன்சிலிங்கில் பள்ளி விட்டு பள்ளி மாறலாம்; தற்போதுள்ள மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்துக்கு பயணிக்கலாம் என பெரும்பாலான ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கவுன்சிலிங் அட்டவணை வெளியாகினால், அதற்கேற்ப திட்டமிட முடியும்.
ஆனால், புதிய கல்வியாண்டு இன்று துவங்க உள்ள நிலையில், இதுவரை அட்டவணை வெளியிடப்படாமல் கல்வித்துறை மவுனமாக உள்ளது. தற்போது இடங்களில் பள்ளியில் இணைந்த பின் எப்படி வேறு இடத்துக்கு மாறுவது என்பது தெரியாமல், பலரும் குழப்பத்தில் உள்ளோம்.
No comments:
Post a Comment