சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் ரூ.25 லட்சம் நிதியுதவியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்துவந்த சுப்பையா (57) கடந்த 21 ஆம் தேதி பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை (அக் 25) உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையா மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
ரூ.25 லட்சம் நிவாரணம்
காவல் உதவி ஆய்வாளர் சுப்பையாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றும் காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியாக வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment