புதிய உச்சத்தில் தங்கம் விலை - Seithisudar

Thursday, October 17, 2024

புதிய உச்சத்தில் தங்கம் விலை

 




ஆபரண தங்கம் சவரன் விலை எப்போதும் இல்லாத வகையில் இன்று(அக்.,17) ரூ. 57 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் இன்று(அக்.,17) 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 7,160 ரூபாய்க்கும்; சவரன் 57,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக்.,15) 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,095 ரூபாய்க்கும்; சவரன், 56,760 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 103 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று(அக்.,16) தங்கம் விலை கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து, 7,140 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 360 ரூபாய் அதிகரித்து, 57,120 ரூபாய்க்கு விற்பனையானது.


இந்நிலையில், சென்னையில் இன்று (அக்.,17) 22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து 7,160 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சவரன் ரூ.160 உயர்ந்து, ரூ.57,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் சவரன் விலை எப்போதும் இல்லாத வகையில் ரூ. 57ஆயிரத்தை தாண்டியது.


வெள்ளி விலை

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.103க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை உயர்வு விஷேச நாட்களுக்கு தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot