பள்ளிகள் திறப்பு - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் - Seithisudar

Friday, May 30, 2025

பள்ளிகள் திறப்பு - தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

 



கோடை விடுமுறைக்கு பிறகு வரும் 2ம் தேதி பள்ளிகள் திறப்பதால், பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.


தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நாளையுடன் முடிந்து, திட்டமிடப்பட்டபடி வரும் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 


இந்த ஆண்டு கோடை வெயில் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டதால், விடுமுறை நீட்டிப்பதற்கான அவசியம் ஏற்படவில்லை.


இந்நிலையில், சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறப்பதால், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள், சத்துணவு சமையல் அறை போன்றவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.


அதன்படி, அனைத்து தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 2 நாட்களாக தூய்மைப்பணி முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்த பிறகே பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் தூய்மைப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot