பாடம் நடத்தவா... தேர்தல் நடத்தவா - மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்கள் கேள்வி - Seithisudar

Monday, May 26, 2025

பாடம் நடத்தவா... தேர்தல் நடத்தவா - மாநகராட்சிப்பள்ளி ஆசிரியர்கள் கேள்வி

 




2026ம் ஆண்டு நடைபெறவுள்ள, தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிக்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இப்பணிக்காக அதிக எண்ணிக்கையில், தங்களை நியமனம் செய்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:


அரசுப் பள்ளிகளில், ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே வாக்குச்சாவடி அலுவலராக நியமிக்கப்படுகிறார்.


ஆனால், மாநகராட்சி பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்து ஆசிரியர்கள் வரை நியமிக்கப்படுவது, மாணவர்களின் கற்றலில் பாதிப்பை ஏற்படுத்தும்.


50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் விரைவில் ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களையும், இந்த பணிகளுக்கான பட்டியலில் சேர்த்திருக்கின்றனர். மாநகராட்சி ஊழியர்களும் தேர்தல் பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot