சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள வேல்ஸ் வித்யாலயா பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவனை தலைமை ஆசிரியர் நேற்று கண்டித்ததால், பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவன் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்று கூறி, பெற்றோர், உறவினர்கள் பள்ளியின் நுழைவு வாயிலில் திரண்டனர்.
பெண் ஆசிரியர்களிடம் இரட்டை அர்த்த வார்த்தைகளில் மாணவன் பேசியதால், அவனுக்கு பாடம் புகட்ட போலியாக டி.சி கொடுத்து, பெற்றோரை அழைத்து வர அறிவுறுத்தினோம் என்று பள்ளி சார்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையே, சென்னை புரசைவாக்கத்தில், இன்று மாணவனை கண்டுபிடித்த போலீசார், சங்கர் நகர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
No comments:
Post a Comment