'பிரதமரின் இன்டர்ன்ஷிப் - 2024' திட்டத்தில், வேலைவாய்ப்பு பெற, வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய பட்ஜெட்டில், இளைஞர் மற்றும் இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டது.
முன்னணியில் உள்ள, 500 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்தில், வேலைவாய்ப்பு வழங்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தில், 18 முதல் 24 வயது வரையுள்ள, படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.தேர்வானதும், 6,000 ரூபாய் வழங்கப்படும்; பணியில் சேர்ந்த பிறகு, ஓராண்டு வரை, மாதம், 5,000 ரூபாய் ஊக்கத்தொகை கிடைக்கும்.குறைந்தது, 10ம் வகுப்பு துவங்கி, ஐ.டி.ஐ., - டிப்ளமோ மற்றும் பட்டம் பயின்றவர்கள், 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'முன்னணியில் உள்ள, 500 நிறுவனங்களில், 90,000 வேலைவாய்ப்பு கண்டறியப்பட்டுள்ளது. 12ம் தேதி முதல் முன்பதிவு நடந்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, https://www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்திலும், 1800 11 6090 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்' என்கின்றனர் அதிகாரிகள்.
No comments:
Post a Comment